Monday, June 27, 2011

சூரியசக்தி மாணவர்கள்

  • மதுரை: மதுரை மாணவர்கள், மின்சக்தியால் இயங்கும் வாகனம் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
  • கே.எல்.என்.பொறியியல் கல்லூரி (எம்.பி.ஏ.,) மேலான்மை முதலாம் ஆண்டு மாணவர் கார்த்திக், சாக்ஸ் பொறியியல் கல்லூரி இயந்திர பொறியியல் மாணவர் ஹரி இணைந்து இந்த வாகனத்தை உருவாக்கியுள்ளனர். சூரிய சக்தியை "சோலார் பேனல்' மூலம் சேகரித்து, மின் சக்தியாக மாற்றி மின்கலத்தில் சேகரிக்கப்பட்டு, இந்த வாகனம் இயக்கப்படுகிறது. இதற்காக தனி சோலார் பேனல், எலக்ட்ரிக் ட்ரைவ் வீலர், மோட்டார் வடிவமைக்கப்பட்டுள்ளது. காலை முதல் மாலை வரை சூரிய ஒளியில் "சார்ஜ்' செய்யப்பட்டால் 30 முதல் 35 கிலோ மீட்டர் வரை இந்த வாகனத்தை இயக்கலாம். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாமலும், விலையேறி வரும் பெட்ரோல், பற்றாக்குறை உள்ள மின்சாரம் இவற்றுக்கு மாற்றாக இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • கார்த்திக், ஹரி கூறியதாவது: பெட்ரோல் விலை உயர்வையடுத்து, மின்சாரத்தில் இயங்கும் வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு நாளைக்கு 8 மணிநேர மின் தடையால் அதுவும் சாத்தியமில்லாமல் போனதால், சூரிய சக்தி மூலம் இயங்கும் வாகனம் தயாரிக்க முடிவு செய்தோம். பழைய பொருள் விற்பனை செய்யும் சந்தையில் கிடைத்த பொருள்கள் மூலம் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டது. இரவு இயக்குவதற்காக வண்டியின் முகப்பில் "டையனமோ லைட்' பயன்படுத்தப்பட்டுள்ளது. அலுவலகம் செல்வோர் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த வாகனத்தை வெயிலில் நிறுத்திச் சென்றால் வீட்டுக்குத் திரும்பும் போது பயன்படுத்தலாம். ஒரு வாகனம் உற்பத்தி செய்ய தற்போது ரூ.60 ஆயிரம் செலவாகிறது. எங்களால் ரூ.25 ஆயிரத்துக்கு இந்த வகை வாகனத்தை உருவாக்க முடியும். அதற்கான கொடையாளர்கள்  கிடைத்தால் நிச்சயம் சாதிப்போம் என்றனர். இவர்களை 72001 41686, 91506 10003ல் தொடர்பு கொள்ளலாம்.
  •  இவர்கள் தமிழர் என்பதில் பெருமைகொள்வோம்!