நிகழ்த்துக் கலைஞர் திரு.நாகராசன் சொன்னத் தகவல்:
இன்று நிறுவனங்களுக்கு பல்வகைப் பெயர்கள் பல்வேறு காரணங்களுக்காக வைக்கப்படுகின்றது. குறிப்பாக எண்ணியல் அடிப்படையில் வைக்கப்படுகின்றது. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பாக தமிழர் ஒருவர் தம் நிறுவனத் தயாரிப்பிற்கு எண்ணையே பெயராக வைத்திருப்பது ஆச்சர்யமல்லவா?. ஆம் ”1431” பயோரியா பல்பொடி தமிழர்களிடையே புகழ்பெற்றவொன்று. வழக்கம்போல் நம்மவரை நாம் கவனிப்பதில்லை, மேலைநாட்டாரின் கோமாளிதனத்தைக்கூட வியந்து பேசுவோம்.
1431 என்பதற்கான காரணத்தை நாம் யாரும் சிந்தித்துக் கூட இருக்கமாட்டோம். சிந்தித்து விடை அறிந்திருந்தால் நமது வரலாறு பண்பாடு வாழ்வியல் என்பவற்றை அறிந்திருக்கக் கூடும்.
ஆம், 1330 குறளும், உமாபதி சிவாச்சாரியார் எழுதிய திருவருட்பயனில் 100 பாடல்களும் அதற்கான கடவுள் வாழ்த்து ஒன்றுமாகச் சேர்ந்து 1431 என்ற கூட்டுத் தொகையினை தமது தயாரிப்பிற்கு பெயராக வைத்துள்ளார் திரு.துரைசாமியார் அவர்கள்.
இதுவொரு வாய்வழிச் செய்தியாக இருந்தாலும், இன்று ஆங்கிலப் பெயர்களையும் சாதகம், வாசுது, எண்ணியல் பின்செல்வோருக்கு ஒரு சாட்டையடிதான்.
எம்முன்னோர் திரு.துரைசாமியார் அவர்களின் எண்ணங்களையும் தொழில் முயற்சி புதுமைக் கண்ணோட்டம் என்னை வியப்பிலாழ்த்தியது.
வாழ்க துரைசாமியார் புகழ்!
ஆம் ஐயா,
ReplyDeleteஅக்காலத்தில் வாழ்ந்த துரைசாமியாருக்கு தன்மேளும் தொழிள்மேளும் நம்பிக்கை இருந்திருக்கிறது. இக்காலத்தவருக்கு குறைந்து போனதற்கு காரணம் நம் வரலாற்று பண்பாட்டு விழுமியங்கள் மீது சிந்தனை அற்றுபோனது தான். இனியோனும் நம் வரலாற்று பண்பாட்டு விழுமியங்களை சிந்தனை மூலம் மீட்டெடுப்போம், அதன்மூலம் மூடநம்பிக்கைகளை தகற்தெறிவோம்.
தகவல் அளித்த தங்களுக்கும் தோழர் நாகராசனுக்கும் வாழ்த்துக்கள் சிறக்கட்டும் தங்கள் தமிழ்திடல் வலைபூ பணி.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
நன்றி தோழர்.
ReplyDelete