திருக்குறள் வகுப்பில் கேட்ட ஒரு கதை, பலரும் அறிந்தவொன்றுதான்.
ஆற்றில் தத்தளித்த ஒரு தேளை முனிவர் ஒருவர் கையால் எடுத்து கரையில் விடும் போது அத்தேள் அவரை கொட்டிவிட்டது. உடன் வந்த சீடர் அதை ஏன் காப்பாற்றினீர் கொட்டிவிட்டதல்லவா என்று கேட்க, கொட்டுவது அதன் இயல்பு, காப்பாற்றுவது என் இயல்பு என்று கூறி பண்புடைமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியதாக ஆசிரியர் கூறினார்.
நீதி: துன்பம் நேரும் என்றாலும் பண்பில் சிறந்தோங்க வேண்டும்.
கைப்புள்ள சொன்னது: எல்லாம் சரிதான் தேளை கையால் எடுக்காமல் கம்பால் எடுத்தால் இந்தப் பிரச்சனை வராதுல்ல...!!!.
No comments:
Post a Comment